தகவலறிந்த தீயணைப்பு துறையினர் 30க்கு மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் விரைந்து சென்றனர். அதிகாலையில் நிகழ்ந்த தீ விபத்தில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. மேலும் விபத்தில் இருந்து பலர் மீட்கப்பட்டு சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தீயணைப்பு துறை அதிகாரிகள் கூறினர்.இந்நிலையில், டெல்லியில் நிகழ்ந்த கோர தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
இந்த தீ விபத்து தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், டெல்லி பயங்கர தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும்,விபத்தில் காயமடைந்தோருக்கு தேவையான உதவிகளை செய்ய அதிகாரிகளுக்கு ஆணையிட்டுள்ளோம் என்று பதிவிட்டுள்ளார்.