குடும்பத்துடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய அமிதாப் பச்சன்.
இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் அமிதாப்பச்சன்.இவரின் 79 பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நடிகர்கள் தர்மேந்திரா, சிரஞ்சீவி, மோகன்லால், அஜய்தேவ்கன், அக்ஷய்குமார், சஞ்சய்தத் ஆகிய திரையுலக பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். தனது பிறந்தநாளை அவர் குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
மேலும், நாடு முழுவதும் அவரது ரசிகர்கள் பல ஆதரவற்ற இல்லங்களுக்கு அன்னதானம் அளித்தல், கோயில்களில் சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டனர்.தற்போது, அமிதாப் பச்சன் ரன்பீர் கபூருடன் பிரம்மாஸ்திரா, பிரபாஸ் நடிக்கும் பெயரிடாத படம், அஜய்தேவ்கன் உடன் மே டே ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.