மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உடல்நலக்குறைவால் கடந்த செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறுநீரக கோளாறு இருப்பதாகவும், அதன் காரணமாகவே தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால் வழக்கமான உடல் பரிசோதனை நிமித்தமாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி தங்கி சிகிச்சை பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நேற்றிரவு சிகிச்சை முடிந்து அமிதாப் பச்சன் வீடு திரும்பியுள்ளார்.இந்தியில் ஷோலே, டான், பிளாக், பிங்க் உள்ளிட்ட 190 திரைப்படங்களில் நடித்துள்ள அமிதாப் பச்சனுக்கு சமீபத்தில் தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Categories