Categories
இந்திய சினிமா சினிமா

“அமிதாப் குடும்பம் குணமடைய வேண்டும்” சிறப்பு யாகம் நடத்தும் ரசிகர்கள்…!!

அமிதாப் பச்சனின் குடும்பம் தொற்றிலிருந்து குணமடைந்து வரும் வரை சிறப்பு யாகம் நடத்தப்போவதாக அமிதாப் பச்சன் ரசிகர் மன்றம் தெரிவித்துள்ளது 

இந்தி திரையுலக நச்சத்திரமான அமிதாப் பச்சன் மற்றும் அவரது குடும்பத்தில் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஆராத்யா என 4 பேர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமிதாப் பச்சனின் மனைவியான ஜெயாபாச்சனுக்கு கொரோனா நோய்த்தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பையின் நானாவிதி மருத்துவமனையில் அமிதாப் பச்சனும் அபிஷேக் பச்சனும் மிதமான அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகளான ஆராத்யா இருவரும் கொரோனா அறிகுறிகள் எதுவும் இல்லாததால் அவர்களின் விட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர்.

அமிதாப் பச்சனும் அபிஷேக் பச்சனும் கொரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டுள்ளதால் இருவரும் குறைத்தது ஏழு நாட்களுக்கு மருத்துவமனையில் தக்கியிருந்து சிகிச்சை பெறுவது அவசியம் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அமிதாப் பச்சனின் ரசிகர் மன்றம் அமிதாப் பச்சனின் குடுப்பதினார் கொரோனா நோய்த்தொற்றில் இருந்து மீன்டுவரும் வரை மகா மிருத்யுஞ்ஜய யாகம் நடத்த உள்ளனர். இதுகுறித்து மன்ற தலைவர் சாஞ்ஜோய் படோடியா “அமிதாப் குடுப்பதினார் கொரோனாவில் இருந்து மீட்டுவரும்வரை இந்த யாகமானது நடக்க உள்ளது “என்று தகவல் தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் அமிதாப் பச்சனுக்கென்று ஒரு கோவில் கட்டப்பட்டு உள்ளதால் இந்த யாகத்தை அக்கோவிலில் வைப்பதாக இருந்த போது மழை காரணமாக சாஞ்ஜோய் ஃபிளட்டில் நடத்தப்பட்டு வருகின்றது.

Categories

Tech |