பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் நடிப்பில் பிரபல இயக்குநர் நாக்ராஜ் மஞ்சுலே இயக்கும் படம் ‘ஜுந்த்’. ஸ்லம் சாக்கர் என்ற தனியார் தொண்டு நிறுவனத்தை நடத்திவந்த விஜய் பார்சே என்பவரது வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்படும் இந்தப் படத்தில் விஜய் பார்சே கதாபாத்திரத்தில் சீனியர் பச்சன் நடிக்கிறார். ஆகாஷ் தோஸர், ரிங்கு ராஜ்குரு உள்ளிடோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தை டி சீரிஸ் சார்பில் பூஷண்குமார், கிரிஷன் குமார், ராஜ் ஹிரீமத், சவிதா ராய் ஹிரீமத், நாக்ராஜ் மஞ்சுலே ஆகியோர் தயாரிக்கின்றனர். பினுத் பிரதான் ஒளிப்பதிவு செய்கிறார். அஜய் அதுல், சச்சட் பரம்பரா, விஷால் மிர்ஸா ஆகியோர் இசையமைக்கின்றனர். இந்தப் படத்தின் ஆரம்பகட்டப் பணிகள் கடந்தாண்டு பிப்ரவரியில் தொடங்கிய நிலையில், இந்த ஆண்டு வெளியாகவுள்ளது.
இதனிடையே படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு நேற்று வெளியிட்டிருந்த நிலையில், தற்போது படத்தின் ஒரு நிமிட டீசரையும் வெளியிட்டுள்ளது. அதில் கம்பீரமாக நடந்துசெல்லும் சிறுவர்களும், அமிதாப் பச்சனின் கம்பீரக் குரலும் இடம்பெற்றுள்ளனர். இந்த டீசர் தற்போது இணையத்தில் வேகமாகப் பரவிவருகிறது. இந்தப்படம் மட்டுமல்லாது இந்தாண்டு அமிதாப் பச்சன் நடிப்பில், ‘பிரம்மாஸ்திரா’, ‘குலாபோ சிதாபோ’, ‘உயர்ந்த மனிதன்’, ‘பட்டர்ஃபிளை’ உள்ளிட்ட படங்கள் வெளியாகவுள்ளன.
T 3417 – JHUND .. !! झुंड .. आ गया, आ गया .. !!https://t.co/EVMSSTFCi4@SrBachchan @Nagrajmanjule @itsBhushanKumar #KrishanKumar @vinodbhanu #RaajHiremath #SavitaRajHiremath #GargeeKulkarni #MeenuAroraa @AjayAtulOnline @tandavfilms @aatpaat @TSeries
— Amitabh Bachchan (@SrBachchan) January 21, 2020