தேர்தலை முன்னிட்டு ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழக்கத்தை மம்தா பயன்படுத்துவார் என அமித்ஷா கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் பா.ஜ.க-வின் தேசிய தலைவர் அமித்ஷா, முதலமைச்சர் மம்தாவையும், அவரது அரசையும் கடுமையாக விமர்சித்துள்ளார். அதாவது மம்தா “ஜெய் ஸ்ரீ ராம்” என்ற முழக்கத்தை தேர்தலுக்கு முன்பு கையில் எடுத்துக் கொள்வார் என அமித்ஷா அவரை விமர்சனம் செய்துள்ளார்.
மேலும் இந்த தேர்தல் களமானது பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சிக்கும், மம்தாவின் அழிவிற்கும் இடையே நடைபெறும் போர் என்று அமித்ஷா கூறியுள்ளார். இதனை அடுத்து மம்தா மற்றும் பிரதமர் இதற்கு முன் பங்கேற்ற நிகழ்ச்சியில் “ஜெய் ஸ்ரீ ராம்” என்ற முழக்கம் எழுப்பப்பட்ட போது மம்தா கோபமடைந்துள்ளார். இதனை நினைவில் வைத்த அமித்ஷா உண்மையாகவே மம்தாவிற்கு “ஜெய் ஸ்ரீ ராம்” என்ற முழக்கம் எரிச்சலடைய செய்வதாகவும், ஆனால் தேர்தலை மனதில் வைத்து அவர் “ஜெய் ஸ்ரீ ராம்” என்ற முழக்கத்தை பயன்படுத்துவார் என்று விமர்சித்துள்ளார். மேலும் 294 தொகுதிகளில் 200 தொகுதிகளை பா.ஜ.க கண்டிப்பாக கைப்பற்றும் என அமைச்சா் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.