Categories
தேசிய செய்திகள்

கொரோனாவை வென்றார்… மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா…!!

கொரோனா பாதிப்பில் இருந்த மீண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கொரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், தற்போது அவர் குணமடைந்து விட்டார். சென்ற ஆகஸ்ட் 2ஆம் தேதி அமித் ஷாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில், டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நாள்பட்ட வியாதிகள் இருந்த நிலையில், இவரது சிகிச்சை குறித்து எய்ம்ஸ் மருத்துவக் குழு ஆலோசனைகளை வழங்கிவந்தது.

இந்தநிலையில், இன்று அமித் ஷாவுக்கு, கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இல்லை என, பரிசோதனை முடிவு வந்துள்ளது . இது பற்றி, அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், மருத்துவமனை நிர்வாகத்திற்கு நன்றி என்றும், எனது உடல் நலன் குறித்து பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என்றும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி, சில நாட்கள் நான் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளப் போகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |