உள்துறை அமைச்சர் அமித்ஷாவை காணவில்லை என காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணி புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, படுக்கை வசதி, தடுப்பூசி தட்டுப்பாடு போன்ற காரணத்தினால் நோயாளிகள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றன.
இப்படிப்பட்ட சூழல் இந்தியாவில் நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் காலையில் இந்தியாவை காணவில்லை என்று ஒரு நாளிதழில் வெளியிடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதைத் தொடர்ந்து தற்போது உள்துறை அமைச்சர் அமித்ஷாவை காணவில்லை என டெல்லி போலீசில் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணி புகார் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து
கூறியதாவது: “கொரோனா 2-வது வேகமெடுத்து கொண்டிருக்கும் சமயத்தில் உள்துறை அமைச்சரை காணவில்லை. அரசியல்வாதிகள் நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். ஆபத்து நேரத்தில் ஒளியை கூடாது என அதில் தெரிவித்துள்ளனர்.