மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடல்நிலை குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தனக்கு தொற்று இருப்பதாகவும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும் எனவும் அவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதன் பின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அமித்ஷா கொரோனாவில் இருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளார். ஆகஸ்ட் 18ஆம் தேதி திடீரென்று அவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவால் மீண்டும் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அமித்ஷா உடல் நலம் தேறி வருவதாகவும் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் எனவும் எய்ம்ஸ் மருத்துவ நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதன்படி, சிகிச்சைக்கு பிறகு அமித்ஷா உடல்நலம் தேறி உள்ள நிலையில், இன்று காலை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். விரைவில் அவர் பணிக்கு திரும்புவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.