நேற்று திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி தனது 54-ஆவது பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார். இந்த நிலையில் டெல்லியில் இருந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா கனிமொழியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆனால் தமிழக எம்.பி.க்கள் நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திப்பதற்காக டெல்லியில் முகாமிட்டு காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இதுவரை 2 முறை அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதேபோல் காங்கிரஸ், அதிமுக, திமுக, இடதுசாரிகள், விசிக என அனைத்து கட்சி எம்.பி.க்களும் இதுவரை மூன்று முறை சென்று பார்க்க முயற்சித்தும் அமித் ஷாவை சந்திக்க முடியவில்லை. இதற்கிடையே அரசியல் வட்டாரங்கள் மாணவர்களின் கல்வி பிரச்சினைக்காக உள்துறை அமைச்சர் அமித் ஷா-வின் அலுவலத்திற்கு நேரடியாக சென்றும் சந்திக்க முடியாத நிலையில் அவர் உள்ளார். ஆனால் கனிமொழிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல மட்டும் எங்கிருந்து அவருக்கு நேரம் கிடைத்தது என்று திமுக கட்சிக்குள்ளேயே பரபரப்பு கேள்வி எழுந்துள்ளது.