Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“விரோதமும் துரோகமும் அதிமுகவிற்கு எதிராக ஒருங்கிணைந்துள்ளது “அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு பேச்சு !!..

விரோதமும் துரோகமும் அதிமுகவிற்கு  எதிராக ஒருங்கிணைத்துள்ளது என்று ஸ்டாலின் மற்றும் ttv தினகரனை அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டு பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் மே தினத்தை முன்னிட்டு அண்ணா தொழிற்சங்கத்துடன் தொடர்புபடுத்தப்பட்ட புதிய ஆட்டோ சேவையை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆட்டோவை சிறிது தூரம் ஓடிச்சென்று தொடங்கிவைத்தார் இதனையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, அதிமுக ஆட்சி கவிழ்ந்து விடும் என்ற பயத்தில் மூன்று எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டதாக வதந்திகள் பரவி வருகிறது ஆனால் அதிமுக குறித்து எந்தவித பயமும் இல்லை என்றும்,

மூன்று எம்எல்ஏக்களும் கட்சிக்கு விரோதமான செயலில் ஈடுபட்டதால்  தான் கொறாடா   புகார் அளிக்கப்பட்டுள்ளது இதுகுறித்து விசாரிக்க வேண்டிய கடமை சபாநாயகர் கையில் தான் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் சபாநாயகர் மீது திமுக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்ததை ஒருபோதும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத பட்சத்தில் அதனை தைரியமாக எதிர்கொள்ள அதிமுக தயாராக இருக்கிறது என்றும் ,இந்த நிகழ்வை பொருத்தவரையில் விரோதமும் துரோகமும் எங்களுக்கு எதிராக ஒருங்கிணைத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

Categories

Tech |