ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் உள்ள கட்டழகர் கோயிலுக்கு செல்ல பக்தர்களிடம் வனத்துறையினர் ரூபாய் 20 வசூலிப்பதாக தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
கட்டழகர் கோயிலுக்கு செல்ல வனத்துறையினர் 20 ரூபாய் வசூலிக்க தடை விதிக்க கோரி ஆனந்தகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு வனத்துறையினர் சார்பாக வனப் பகுதியை சுத்தம் செய்வதற்காகவே அந்த பணம் வசூலில் செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் வனப்பகுதியை சுத்தம் செய்ய தேவையான நிதியை அரசிடமிருந்தே பெற்றுக் கொள்ளலாமே. 20 ரூபாய் இருந்தால் ஒரு நாள் முழுவதும் அம்மா உணவகத்தில் உணவு அருந்தி விடலாம் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்து இருக்கிறது. மேலும் வழக்கு குறித்து விருதுநகர் ஆட்சியர், மாவட்ட வன அதிகாரி பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.