அம்மா கோவிட் – 19 வீட்டு பராமரிப்புத் திட்டம் இன்று தொடங்கப்படுகிறது. கொரோனா பரவலை தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் தமிழக அரசு, இன்று அம்மா கோவிட் – 19 என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று பரவலை சமாளிக்க தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக மக்கள் நெருக்கம் நிறைந்த பகுதியில் தொற்றை கட்டுப்படுத்துவதில் அரசு முனைப்பு காட்டி வருகிறது. நடமாடும் பரிசோதனை முகாம், காய்ச்சல் பரிசோதனை உள்ளிட்ட சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இதில் கொரோனவால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்க இந்தியாவிலேயே முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படும் இந்த திட்டத்தின் பெயர் அம்மா கோவிட் – 19 என்றும் வீட்டு பராமரிப்பு திட்டமாகும்.
வீட்டுத் திட்டத்தின் கீழ் வீட்டு தனிமையில் உள்ளவர்களை கண்காணிக்க 20 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் சுழற்சி முறையில் பணியாற்றுவார்கள். இந்தத் திட்டத்தின் கீழ் நோயாளிகளுக்கு பல்ஸ் ஆக்சி மீட்டர் கருவி, வெப்ப மானி, வைட்டமின் மாத்திரைகள், 14 முகக் கவசங்கள், கிருமிநாசினி ஆகிய அடங்கிய தொகுப்பு வழங்கப்படும். மேலும் அம்மா கோவிட் – 19 வீட்டு பராமரிப்பு திட்டத்தில் ரூபாய் 2500 செலுத்தி, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் பயன்பெறலாம் என்று, அம்மா கோவிட் – 19 வீட்டு பராமரிப்பு திட்டத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்தார்.