சிம்புவிற்கு அவரது அம்மா உணவு ஊட்டி விடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் ‘ஈஸ்வரன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இயக்குனர் சுசீந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தில் நிதி அகர்வால், பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . இதையடுத்து நடிகர் சிம்பு மாநாடு ,பத்து தல என அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் . நடிகர் சிம்பு தனது படங்கள் குறித்த அப்டேட்டுகள் மற்றும் தன் வாழ்க்கையின் அற்புதமான தருணங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் சிம்புவுக்கு அவரது அம்மா சாப்பாடு ஊட்டி விடும் வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அம்மாவின் கைகளால் உணவு வாங்கி சாப்பிடும் சிம்புவை பார்த்த அவரது தங்கை மகன் ஜோசன் ‘ஏன் அவர் உங்களுக்கு ஊட்டி விடுகிறார்?’ என கேட்கிறான் . அதற்கு பதிலளித்த சிம்பு ‘உன் அம்மா உனக்கு ஊட்டி விடுறாங்க , அதேபோல் என் அம்மா எனக்கு ஊட்டி விடுறாங்க’ என்கிறார். தற்போது சமூக வலைதளங்களில் இந்த க்யூட் வீடியோ வைரலாகி வருகிறது.