சிறுபொழுதில் தனது தாயின் உயிரை காப்பாற்றிய அச்சிறுவனுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றன.
ஜார்ஜியாவில் உள்ள ஒரு வீட்டில் தாய் சாய்வு நாற்காலியில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருக்க அவர்களது மகன்கள் இருவரும் நீச்சல் குளத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அதைத்தொடர்ந்து நீச்சல் குளத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் அம்மா ஓடுங்கள் என்று குரல் எழுப்ப அதனைக்கேட்டு திரும்பிக்கூட பார்க்காமல் எழுந்து ஓடினார் அவர்களின் தாய். அப்போது அங்கிருந்து நகர்ந்த உடன் பெரிய மரம் ஒன்று அவர் அமர்ந்திருந்த நாற்காலி மீது விழுந்தத அவர் அச்சத்தத்தை கேட்டு பயந்து ஓடிய அப்பெண் சற்று திரும்பி பார்த்தார், சிறிது நேரம் தாமதமாகி இருந்தால் தனக்கு என்ன நடந்திருக்கும் என்று நினைத்து பார்த்தாரோ இல்லையோ தெரியவில்லை, அவர் வீட்டுக்குள்ளேயே ஓடி விட்டார்.
இத்தகைய காட்சியானது அவர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு கேமராவில் பதிவாகியது. இந்நிகழ்வை கண்டு அதிர்ச்சியில் நின்ற சிறுவன் தன் அம்மா சாதாரண நிலைக்கு திரும்பி விட்டார் என்று உறுதிப்படுத்திக்கொண்டு பின்னர் வெளியே வந்து தனது சகோதரனுடன் அம்மரத்தினைனையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்பெண் தனது உயிரை தன் மகன் காப்பாற்றி விட்டதாக பெரும் மகிழ்ச்சி அடைந்தார். அதனைத் தொடர்ந்து இத்தகைய வீடியோவினை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இதனை பார்ப்பவர்கள் அனைவரும் அச்சிறுவனுக்கு பாராட்டுகளை அழித்துக் கொண்டிருக்கின்றனர்.