குடும்ப பிரச்சினை காரணமாக பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள கீழ அரியப்பபுரம் பகுதியில் கல்லுதியான் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு பேராட்சி செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் அப்பகுதியில் உள்ள பீடி கம்பெனி பீடி சுற்றும் தொழிலை செய்து வந்துள்ளனர். இவர்களுக்கு 7 வயதுடைய பிரம்ம ராஜேஸ்வரி என்ற ஒரு மகளும், நான்கு வயதுடைய முகேஷ் என்ற ஒரு மகனும் இருக்கின்றனர். இதனையடுத்து பேராட்சி செல்விக்கும் அவரது கணவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் பேராட்சி செல்வி மிகுந்த மனவருத்தத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில் தனது கணவர் வீட்டில் இல்லாத போது பேராட்சி செல்வி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த குழந்தைகள் கதறி அழுதுள்ளனர். இதனையடுத்து குழந்தைகளின் அழுகுரலின் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் வந்து பார்த்து போது செல்வி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பேராட்சி செல்வியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.