Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“அம்மா என்று கதறிய மகள்” இளம் பெண் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்…!!

வாழ்க்கையில் வெறுப்படைந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அத்தை கொண்டான் பகுதியில் ராஜா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு உமா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகள் இருக்கின்றார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் தனது கணவரை விட்டு பிரிந்து உமா தனது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இதனால் வாழ்க்கையை வெறுத்து விட்ட  உமா மிகுந்த மன வேதனையுடன் இருந்துள்ளார்.

இந்நிலையில் உமா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்த அவரின் மகள் அலறி சத்தம் போட்டுள்ளார். அந்த அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று பார்த்து அதிர்ச்சி அடைந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உமாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |