Categories
உலக செய்திகள்

“அம்மாடி இதோட விலை இவ்ளோவா” …. கேட்டாலே தலை சுத்துது …. அப்படி என்னதான் ஸ்பெஷல் இதுல ….?

உலகிலேயே மிக விலை உயர்ந்த பர்கரை நெதர்லாந்து நாட்டை சேர்ந்த சமையற்கலை நிபுணர் உருவாக்கியுள்ளார்.

உலகம் முழுவதும் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் துரித உணவுகளில் பீட்சா,பர்கர் ஆகியவை முக்கியமான ஒன்றாகும். இந்நிலையில் நெதர்லாந்து நாட்டைசேர்ந்த ராபர்ட் ஜான் டெ வின் என்ற சமையல்கலை நிபுணர் உலகிலேயே மிக விலை உயர்ந்த பர்கரை  உருவாக்கியுள்ளார். அவர் டெ டால்டன்ஸ் என்ற உணவகத்தில்தயாரித்த இந்த பர்கருக்கு  ‘தி கோல்டன் பாய்’ என்று பெயர் வைத்துள்ளார். இந்த பர்கருடைய விலை 5 ஆயிரம் ஈரோ அதாவது இந்திய மதிப்பில் சுமார் 4.5 லட்சமாகும்.

இந்த பர்கரில்  வழக்கமான பொருட்களோடு, உலகில் மிக உயர்ந்த காபி கொட்டையான கோபி லுவாக்கால் செய்யப்பட்ட பார்பெக்கு சாஸும் , டாம் பெரிகோன் சாம்பெயினில் தயாரிக்கப்பட்ட பன் ஆகியவை இந்த பர்கரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த பர்கர் தங்க இழை சுருளால் சுற்றப்பட்டு அளிக்கப்படுகிறது. இந்த பர்கரில்  விலை உயர்ந்த பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதால் உலகிலேயே மிக விலையுயர்ந்த பர்கராக பார்க்கப்படுகிறது.

Categories

Tech |