Categories
சினிமா தமிழ் சினிமா

அம்மாடியோ!… வாரிசு இசை வெளியீட்டு விழாவில் இத்தனை பிரபலங்களா….? அப்ப செம ட்ரீட் தான் போங்க…!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, குஷ்பு, மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே மற்றும் 2- பாடலான ரஞ்சிதமே தீ தளபதி போன்றவைகள் வெளியாகி  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பிறகு இன்று வாரிசு படத்தின் 3-ம் பாடலும் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் டிசம்பர் 24-ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. இந்த இசை வெளியீட்டு விழாவை பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ராஜு தொகுத்து வழங்குகிறார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ளும் பிரபலங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. மேலும் வாரிசு படத்தில் இசை வெளியீட்டு விழாவில் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

Categories

Tech |