நாட்டில் மிகவும் பழமையான பாறையில் வரையப்பட்ட கங்காருவை ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
ஆஸ்திரேலியா விஞ்ஞானிகள் நாட்டின் மிகப் பழமையான ராக் ஆர்ட் கண்டுபிடித்துள்ளனர் . அங்கு பாறையில் கங்காரு ஒற்றை மனிதன் சித்திரங்கள் மற்றும் படர்ந்திருந்த குளவிக்கூடு போன்றவை சுமார் 17 300 ஆண்டுகள் பழமையான ஓவியம் என்று கண்டுபிடித்துள்ளது . இதில் கங்காரு ஓவியங்கள் மற்றும் பல ஓவியங்கள் சுமார் 2 மீட்டர் (அதாவது 6.5 அடி) உள்ள ஒரு பாறை குகையில் தங்குமிடத்தில் மேற்பரப்பில் இருந்த வண்ணப்பூச்சு மூலம் சித்தரிக்கப்பட்டது. மேற்கு ஆஸ்திரேலியாவின் கிம்பர்லி பிராந்தியத்தில் உள்ள குகை பகுதி ட்ரைஸ்டைல் நதி தேசிய பூங்காவாக பராமரிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குகைகள் மிகவும் பழங்குடி பாறை ஓவியங்களுக்கு பெயர் பெற்றுள்ளது. மேலும் பூங்காவின் பாரம்பரிய உரிமையாளர்களும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் இணைந்து இயற்கையான பாறைகளின் வயதை கணக்கிடபட்டுள்ளனர். இதன் மூலம் இந்த ஓவியங்கள் பழங்கால மக்களின் முன்னோர்களால் வரையப்பட்டுள்ளது என்பது தெரியவந்தது. இதனை ரேடியோ கார்பன் டேட்டிங் பயன்படுத்தி பண்டைய மண் குளவிக் கூடுகளின் வயது தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேச்சர் ஹுயூமன் பிஹேவியர் இதழில் கடந்த செவ்வாய்க்கிழமை இந்த கண்டுபிடிப்புகள் வெளியிடப்பட்டது.
இதில் கார்பன் டேட்டிங் என்ற புதிய நுட்பத்தை பயன்படுத்தி குளவிக் கூடுகளின் ஓவியங்களை தேட முடிந்தது என ஆராய்ச்சியாளர்கள கூறினார்கள். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மண் குளவிகள் குகையில் வசித்து வருவதால் ஆராய்ச்சியாளர்களுக்கு ரேடியோ கார்பன் டேட்டிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சுமார் 27 கூடுகளின் வயதை கண்டறிந்ததாகவும் அதன்மூலம் 16 க்கும் மேற்பட்ட ஓவியங்களின் வயதை கண்டறிய முடிந்ததாகவும் கூறினார்கள்.பண்டைய குளவி கூடுகளின் புஷ்பயர்ஸில் கரி மூலக்கூறுகள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அது தாவர மற்றும் விலங்கு பொருட்களின் துண்டுகளும் உள்ளன. இவையெல்லாம் தேதியிடக்கூடிய கார்பனை கொண்டிருப்பதால் ஆராய்ச்சியாளர்கள் பாறையில் வரையப்பட்டுள்ள கங்காருவுக்கு மேலேயும் கீழேயும் கூடுகள் இருந்ததால் அந்தக் கூடுகள் வரையப்பட்ட கால அளவை எங்களால் கணக்கிட முடிந்தது என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இதைப்பற்றி மெல்போர்ன்ஸ் பல்கலைக்கழகத்தின் புவியியலாளர் டாக்டர் பிஞ்ச் கூறியது “ஓவியத்திற்கு அடியில் மூன்று குழவி கூடுகளும் அதன் மீது கட்டப்பட்ட மூன்று கூடுகளையும் நாங்கள் ரேடியோ கார்பன் முறையில் தேதியை கணக்கிட்டு நம்பிக்கையுடன் ஓவியம் 17,500 முதல் 17 100 வரை பழமையானது” என்பதை தீர்மானித்தோம்.
பெரும்பாலும் இவை 17,500 ஆண்டுகளுக்கு பழமையானது என்றும் உறுதியாக தெரிய வந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் மிகப் பழமையான ராக் ஆர்ட் என அழைக்கப்படுகிறது. இந்த படங்கள் ஆராய்ச்சியாளர்களுக்கு 1990 இல் தெரிந்திருந்தாலும் மற்றும் பழங்குடியின மக்களால் பல காலமாக அறியப்பட்டிருந்தாலும் டேட்டிங் ராக் ஆற்றின் வரம்புகளால் அவற்றின் வயதுகள் தெரியாமல் இருந்து வந்தது. இந்நிலையில் இந்தப் பாறைகளில் ஒரு பாம்பு பல்லி போன்ற உயிரினம் மற்றும் கங்காரு போன்ற மர்சுபியல் கள் உள்ளிட்ட பல பழங்கால ஓவியங்களை தேதி டப்பட்டு. இந்த பழங்கால ஓவியங்களை உருவாக்க அக்கால மனிதர்கள் ஒருவரை பயன்படுத்தியதாகவும் இது சிவப்பு நிறமியை உருவாக்கியதாகவும் புறப்பட்டுள்ளனர்.