ஜேர்மனியில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களில் ஆப்கான் அகதிகள் சிக்கி தவிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அமெரிக்க நாட்டுக்கு அழைத்து செல்லப்பட்ட ஆப்கான் மக்களில் சிலருக்கு மண்ணன் (measles) என்ற அம்மை நோய் தாக்கியது தெரிய வந்துள்ளது. இதனால் அமெரிக்க அரசு ஆப்கான் நாட்டவர்களை விமான நிலையத்தில் இருந்து அழைத்துச் செல்வதை தற்போது நிறுத்தியுள்ளது.
இந்த காரணத்தால் ஜேர்மனியின் Ramstein மற்றும் Kaiserslautern ஆகிய இடங்களில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவ தளங்களில் எஞ்சியுள்ள அகதிகளை தங்க வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது ஜேர்மனியின் அமெரிக்க விமான தளங்களில் தங்கி உள்ளவர்களுக்கு மண்ணன், தட்டம்மை, ரூபெல்லா மற்றும் சின்னம்மை ஆகிய நோய்களுக்கான தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அமெரிக்கா வருகின்ற வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் ஆப்கான் அகதிகளை அழைத்துச் செல்ல விமான சேவையைத் தொடர்ந்து துவங்கும் என எதிர்பார்க்க படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.