அம்மன் கோவிலில் பெண்கள் விரதமிருந்து மாவிளக்கு ஏந்தி ஊர்வலமாக சென்றுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை அடுத்ததாக கீரைக்காரன்தட்டு பகுதியில் கருமாரியம்மன் மற்றும் உச்சினிமாகாளி அம்மன் கோவில் அமைந்திருக்கிறது. இந்தக் கோவிலில் மாவிளக்கு பூஜை சீரும் சிறப்புமாக நடைபெற்று இருக்கிறது. இதில் ஏராளமான பெண்கள் மாவிளக்கு ஏந்தி ஊர்வலமாக முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் கோவிலுக்கு வந்தனர்.
அதன்பின் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றிருக்கிறது. பின்னர் விரதம் இருந்த பெண்கள் முளைப்பாரி தலையில் சுமந்து கொண்டு ஊர்வலம் நடைபெற்றிருக்கிறது. இதனை தொடர்ந்து இவ்விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் சாமியை தரிசனம் செய்து சென்றுள்ளனர்.