Categories
அரசியல் மாநில செய்திகள்

“அம்மா பெயரும், இரட்டை இலை சின்னமும் தான் மிச்சம்”….. ஓபிஎஸ், இபிஎஸ் அதிமுகவை பலவீனப்படுத்திட்டாங்க…… டிடிவி சாடல்….!!!!!

சென்னையில் உள்ள ராயப்பேட்டையில் அமுமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் 2024-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் அல்லது பாஜக யாருக்கு சாதகமாக அமையும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. ஒரு நாட்டில் இரு பலமான கட்சிகள் கண்டிப்பாக இருக்க வேண்டும். தேர்தல் வருவதற்கு ஒரு சில மாதங்களுக்கு முன்பாக தான் யார் பலம் வாய்ந்த கட்சி என்பது தெரியவரும். அடுத்த மாதத்துக்குள் தெரியவர வாய்ப்பு இருப்பதால் அதைப்பற்றி அப்புறமாக பேசுவோம் என்றார்.

அதன் பிறகு கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் இனி வருகிற தேர்தலிலும் திமுக கூட்டணி வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் அதிமுக பலம் வாய்ந்த கூட்டணியை அமைக்குமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு டிடிவி தினகரன் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இணைந்து அதிமுக கட்சியை பலவீனப்படுத்தி விட்டார்கள்.  அம்மா மற்றும் இரட்டை இலை சின்னம் மட்டும் தான் தற்போது அவர்களை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.

எனவே நான் முன்பு சொன்னது போன்று அதிமுக கட்சியின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஒரே அணியில் இணைந்தால் மட்டும் தான் திமுக கூட்டணியை வீழ்த்த முடியும் என்றார். அதன் பிறகு திமுக கூட்டணி மீது தற்போது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. தேர்தலின் போது ஏதேதோ வாக்குறுதிகளை கொடுத்த முதல்வரால் தற்போது எதையுமே காப்பாற்ற முடியாததால் தான் திராவிட மாடல் என்று புலம்பி கொண்டிருக்கிறார். மேலும் மின் இணைப்பு மற்றும் ஆதார இணைப்பு அறிவிப்பால் பெரும்பாலான மின் நுகர்வோர்கள் அபராதத்துடன் மின்கட்டணத்தை செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்று வேதனையோடு கூறினார்

Categories

Tech |