அமாவாசையை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபி சாரதா மாரியம்மன் கோவிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டில் அபிஷேகம் மற்றும் தீபாராதனை செய்யப்பட்டு . வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு சாரதா மாரியம்மன் அருள் காட்சி அளித்தார். இதில் கோபி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பெரும்பாலான பக்தர்கள் கலந்துகொண்டு முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் அம்மனை வழிபட்டு சென்றனர். இதேபோன்று கோவை டவுன் அக்ரஹாரம் ஈஸ்வரன் கோவில் வீதியில் விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரர் கோவில் இருக்கின்றது. அங்கு அமாவாசையை முன்னிட்டு விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
அதன்பின் விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரர் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் காட்சி அளித்தார். மேலும் கோபி அருகில் உள்ள பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில், அளுக்குளி செல்லாண்டியம்மன் கோவில், பச்சைமலை சுப்பிரமணிய சுவாமி கோவில், மொடச்சூர் பால மாரியம்மன் கோவில் மற்றும் சுற்றுவட்டாரத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் அமாவாசை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதேபோன்று ஊஞ்சலூர் நாகேஸ்வர சுவாமி கோவில், மாரியம்மன், செல்லாண்டி அம்மன் கோவில்களில் அமாவாசை சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும் கொளாநல்லி பாம்பலங்கார சுவாமி கோவில், கொந்தளம் நாகேஸ்வர சுவாமி கோவில் போன்றவற்றில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.