Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அம்மாவோட கோவில் திறந்தாச்சு…. பாதயாத்திரை புறப்பட்ட அதிமுக பிரமுகர்கள்….!!

ஜெயலலிதாவின் கோவிலுக்கு அதிமுகவைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பாதயாத்திரையாக புறப்பட்டுள்ளனர்.

வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் திருமங்கலம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கல்லுப்பட்டி அருகே உள்ள குன்னத்தூரில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு தனது சொந்த செலவில் நினைவு திருக்கோவிலை கட்டியுள்ளார். நாளை இக்கோயிலில் தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது.

அதற்காக பரமக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் சதன் பிரபாகரன் காப்புக்கட்டி விரதம் இருந்து வருகிறார். மேலும் அவர் பரமக்குடியில் இருந்து குன்னத்தூருக்கு பாதயாத்திரையாக செல்ல புறப்பட்டுள்ளார். இதனை ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முனியசாமி தொடங்கி வைத்தார். மேலும் பரமகுடி எம்எல்ஏ தமிழர் குலசாமி அம்மா என்ற முழக்கத்துடன் பாதயாத்திரையை தொடங்கினார். அவருடன் இணைந்து தொண்டர்களும் பாதயாத்திரையில் கலந்து அம்மாவின் கோவிலுக்கு நடந்து செல்கின்றனர்.

Categories

Tech |