இந்த வழக்கு நடந்து கொண்டு இருக்கும் போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது . இதையடுத்து சின்னம் தொடார்பான தீர்ப்பு வர தாமதமான சூழலில் தேர்தலில் போட்டியிட குக்கர் சின்னம் ஒதுக்க வேண்டுமென்று TTV தினகரன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்ற போது பதிவு செய்யப்படாத கட்சிக்கு பொதுச் சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இதற்கான உரிய சட்ட விதிகள் குறித்து அறிக்கையை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.இந்நிலையில் இந்த வழக்கு இன்று காலை 10 மணிக்கு முதல் வழக்காக விசாரிக்கப்பட இருக்கின்றது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் இந்த வழக்கின் தீர்ப்புக்காக அமமுக வேட்பாளர் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Categories