Categories
அரசியல் மாநில செய்திகள்

AMMKல சிஸ்டம் ஜம்முனு இருக்கு..! பரிச்சை எழுதி பாஸ் ஆகுங்க.. டிடிவி அன்பு கட்டளை ..!!

அமமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன்,  கொரோனாவிற்குப் பிறகு பொதுக்குழு நடக்கிறது, சட்டமன்ற பொது தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது, அதனால் வருங்காலத்தில் வைத்துக் கொள்ளலாம். அடுத்த ஆண்டு தேர்தல் இருப்பதினால் உங்களுடைய ஒப்புதலுடன் நிறுத்தப்பட்டு இருக்கிறது. அது போல் இங்கே உள்ளவர்கள் எல்லாம் நான் வசப்படுத்திக் கொண்டு, எல்லா பதவியையும் நான் எடுத்துக் கொண்டு போவது பெரிய விஷயம் அல்ல.

தமிழ்நாடு முழுவதும் தொலைக்காட்சியிலே நமது பொதுக்குழு எப்படி நடக்கிறது என்று வீட்டு விசேஷத்தை போல பார்த்துக் கொண்டிருக்கிறார்களே அம்மாவின் உண்மையான தொண்டர்கள், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் உயிராக இருக்கக்கூடிய தொண்டர்கள், அவர்கள் யாரை விரும்புகிறார்களோ,  அவர்கள்தான் தலைவராக வர முடியும். அதனால் நாம் கட்சியில் சிஸ்டம் எல்லாம் சரியாக வைத்திருக்கிறோம்.

நீங்கள் அனைவரும் அங்கே உள்ள நிர்வாகிகளை, பிற அணி நிர்வாகிகளை எல்லோரையும் அரவணைத்து சென்று, அம்மாவின் திருவுருவம் தாங்கி இருக்கின்ற கொடி பறக்காத ஊர்களே இல்லை, கிராமமே இல்லை என்கின்ற அளவிற்கு நீங்கள் பணியாற்ற வேண்டும். குக்கர் சின்னம் இல்லாத சுவர்களையே இல்லை என்பதை நீங்கள் தமிழ்நாடு முழுவதும் உருவாக்க வேண்டும்.

ஏனென்றால் சரியாக சொன்னார்கள். டிடிவி என்றால் எல்லாருக்கும் தெரிகிறது, அவர் சின்னத்தை கொண்டு போய் சேர்க்க வேண்டியது நான் என்னதான் முயற்சி செய்தாலும், அதை தொண்டர்கள் நீங்கள் தான் செய்ய வேண்டும். நீங்கள் தான் பரிசு எழுதப் போகிறவர்கள், நீங்கள் சேர்ந்து பரீட்சை எழுதி பாஸ் ஆனால் தான், அம்மாவுடைய ஆட்சியை கொண்டுவர முடியும். நான் எதார்த்தமாக இருக்கக்கூடியவன்.

பண பலத்தை வைத்துக்கொண்டு ஆர் கே நகரில் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை, சட்டமன்றத் தேர்தலில், பாராளுமன்ற தேர்தலில் அண்ணா திமுக எவ்வளவு செலவு செய்தும், ஏதோ ஒரு தொகுதியில் தப்பி தவறி ஜெயித்தார்கள். சட்டமன்ற பொது தேர்தலில் உங்களுக்கு தெரியும், ஏதோ ஒரு பகுதி கட்சி மாதிரி, ஜாதி கட்சி மாதிரி, ஒரு பகுதியில் மட்டும் ஜெயித்தார்கள்.  அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெற்ற முடியவில்லை, ஆனால் துரோகிகள் வெற்றி பெற முடியாமல் செய்தது,  அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என தெரிவித்தார்.

Categories

Tech |