Categories
அரசியல்

அமமுக நெல்லை வேட்பாளர் மாற்றம்…… ஓசூரில் புகழேந்தி போட்டி…!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் முழுமையாக வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடைபெறும் மக்களவை மற்றும் 18 சட்டபேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில்  வாக்குப்பதிவு ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறுகின்றது . இந்த தேர்தல் ஐந்து முனைபோட்டியாக பார்க்கப்படுகின்றது . திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி , அதிமுக தலைமையிலான கூட்டணியும் , மக்கள் நீதி மைய்யம் , நாம் தமிழர் கட்சி மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகியவை களம் காண்கின்றது  . பிரச்சாரம் மற்றும் விருப்பமனு என வேட்பாளர்களரின் அடுத்தடுத்த தேர்தல் பணி சூடுபிடித்து வருகின்றது தமிழக தேர்தல் களம் .

 

இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் TTV தினகரன் முழு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே இரண்டு கட்டமாக  வெளியிடபட்ட வேட்பாளர் பட்டியலில் புதுச்சேரி நாடாளுமன்றம் மற்றும் ஓசூர் சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிக்கு வேட்பாளர் அறிவிக்கபடாத சூழலில் இன்று வெளியாகிய அறிக்கையில் புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக அக்கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளர் தமிழ் மாறனும் , ஓசூர் சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதி வேட்பாளராக கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் திருநெல்வேலி நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஞான அருள்மணிக்கு பதிலாக மைக்கேல் ராயப்பன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Categories

Tech |