Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அந்த பையை பார்த்தீர்களா….? தவித்து நின்ற தாய்-மகள்…. நடந்த நெகிழ்ச்சி சம்பவம்…!!

பேருந்தில் தவற விட்ட பணம் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கொத்தமங்கலத்தில் இருந்து அறந்தாங்கி செல்லும் டவுன் பேருந்தில் ஒரு பெண் தனது மகளுடன் ஏறியுள்ளார். இவர்கள் இருவரும் கீரமங்கலத்தில் இறங்கிவிட்டனர். அதன்பிறகு பட்டுக்கோட்டை செல்லும் தனியார் பேருந்தில் ஏறி டிக்கெட் எடுப்பதற்காக பையை தேடிய போது அது காணாமல் போனதை அறிந்து இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த பையில் பணமும், மருத்துவச் சீட்டு இருந்துள்ளது. இதனை அடுத்து கீரமங்கலம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தவர்களிடம் பையை பார்த்தீர்களா என்று தாயும், மகளும் அழுதபடி கேட்டுள்ளனர்.

அப்போது அறந்தாங்கியில் இருந்து திரும்பி வந்த அந்த அரசு பேருந்தின் ஓட்டுனர் ஜெயராஜ் என்பவர் தாய் மற்றும் மகளிடம் தொலைந்து போன பை குறித்து விசாரித்துள்ளார். அப்போது நடத்துனர் அவர்களிடம் பையில் என்ன இருந்தது என்று கேட்டுள்ளார். அதற்கு மருத்துவ சீட்டு மற்றும் 4 ஆயிரத்து 200 ரூபாய் பணம் அந்த பையில் இருந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறியது சரியாக இருந்ததால் ஓட்டுனர் சம்பந்தப்பட்டவர்களிடம் பையை ஒப்படைத்துவிட்டார்.

Categories

Tech |