கிரிக்கெட் அம்பயர் ஒருவர் தலைகீழாக நின்று வைடு பாலை அறிவித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஒவ்வொரு விளையாட்டிலும் நடுவர்களின் பங்கு மிக முக்கியமானதாக உள்ளது .குறிப்பாக கிரிக்கெட்டில் நடுவர்களின் பங்கு மிகவும் முக்கியமானது .இதில் சில நடுவர்கள் குறிப்பிடத்தக்க வகையில் தங்களுக்கே உரிய உடல் மொழியில் முடிவை அறிவிப்பார்கள் .அந்த வகையில் மராட்டிய மாநிலத்தில் நடந்த கிரிக்கெட் தொடரில் அம்பயர் ஒருவரின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது .
மராட்டிய மாநிலத்தில் உள்ளூர் கிரிக்கெட் தொடரான புரந்தர் பிரீமியர் லீக் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் வைடு பால் ஒன்றை அம்பயர் வித்தியாசமான செய்கை மூலம் அறிவித்துள்ளார். பொதுவாக வைடு பால் அறிவிக்க அம்பயர் தங்கள் இரண்டு கைகளையும் நீட்டி அறிவிப்பார்கள். ஆனால் இந்த அம்பயர் தலைகீழாக நின்று தனது கால்களை விரித்து அறிவித்துள்ளார் .இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
A different style of umpiring #Cricket pic.twitter.com/PZdbB2SUIY
— Saj Sadiq (@SajSadiqCricket) December 5, 2021