Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

திடீரென அதிகமான வலி…. ஆம்புலன்சில் கேட்ட குவா குவா சத்தம்…. மருத்துவ உதவியாளர் செயல்….!!

நிறைமாத கர்ப்பிணி பெண்ணிற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் ஆம்புலன்சில் பெண் குழந்தை பிறந்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தென்நந்தியாலம் பகுதியில் கூலித் தொழிலாளியான வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காயத்ரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணான காயத்ரியை பிரசவத்திற்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்துள்ளனர். அதன்பின் காலை நேரத்தில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அப்போது இடையன்சாத்து கிராமம் அருகாமையில் சென்ற போது காயத்ரிக்கு வலி அதிகமானதால் ஆம்புலன்ஸை நிறுத்தி உதவியாளர் சந்திரசேகரன் பிரசவம் பார்த்துள்ளார். இதில் ஆம்புலன்சில் வைத்து அதிகாலை 4.10 அளவில் காயத்ரிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. பின்னர் தாய் மற்றும் குழந்தையை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Categories

Tech |