இங்கிலாந்தில் 11 வயது சிறுவன் ஒருவன் ஸ்காட்லாந்தில் உள்ள பூங்கா ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள அலெக்சாண்டர் ஹாமில்டன் நினைவு பூங்காவில் கடந்த சனிக்கிழமை அன்று மாலை 4.30 மணியளவில் விளையாடிக்கொண்டிருந்த 11 வயது சிறுவன் ஒருவன் எதிர்பாராதவிதமாக குளத்தில் தவறி விழுந்து நீரில் மூழ்கியுள்ளார். இது குறித்து தகவலறிந்து வந்த அவசர சேவையாளர்கள் குழந்தையை குளத்திலிருந்து மீட்டுள்ளனர்.
ஆனால் அந்த சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதன் பிறகு அந்த சிறுவனுடைய குடும்பத்தினருக்கு இந்த சம்பவம் குறித்து தகவல் அளிக்கப்பட்டது. பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.