Categories
தேசிய செய்திகள்

வெறுத்து ஒதுக்கிய தோழிகள்…. 3 ஆண்டுகள் ஆகியும் என்னை மன்னிக்கவில்லை… 11 ஆம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு..!!

உபி.யில் சக மாணவிகளால் புறக்கணிக்கப்பட்ட 11 ஆம் வகுப்பு மாணவி அவமானத்தால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்பூர் அருகில் உள்ள போகான் என்ற இடத்தில் ஜவஹர் நவோதயா வித்யாலயா என்ற பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் 16 வயது மாணவி ஒருவர் 11ஆம்  வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் இவர் நேற்று காலை ஹாஸ்டலில் உள்ள பிரார்த்தனை கூடத்தில்  தற்கொலை செய்துள்ளார். இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து   அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Image result for मैनपुरी के भोगांव स्थित जवाहर नवोदय विद्यालय के हॉस्टल में सोमवार तड़के कक्षा 11 की छात्रा की संदिग्ध ...

பின்னர் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து ஒரு கடிதம் கிடைத்தது. அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, அந்த சம்பவம் நடந்து 3 வருடங்கள் ஆகிவிட்டது. அதன் பிறகும் தொடர்ந்து நான் தண்டிக்கப்பட்டு வருகிறேன். நான் மன்னிக்கபடவில்லை. நான் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டேன்.  என்னை விரும்பியவர்கள் கூட என்னிடம் இருந்து விலகி செல்கின்றனர். என்னை என் வகுப்புத் தோழிகள் நம்பாவிட்டால் பிறகு எப்படி 12ஆம்  வகுப்பு வரை அவர்களுடன் இங்கு படிக்க முடியும். அதனால் நான் தற்கொலை செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
Image result for मैनपुरी के भोगांव स्थित जवाहर नवोदय विद्यालय के हॉस्टल में सोमवार तड़के कक्षा 11 की छात्रा की संदिग्ध ...

இந்த சம்பவம் பற்றி தற்கொலை செய்துகொண்ட மாணவியின் வகுப்பு தோழி ஒருவர் கூறும் போது, இறந்து போன மாணவி 3 வருடத்திற்கு முன்பு வேறொரு மாணவி சாப்பிட வைத்திருந்த தின்பண்டங்களை திருடி விட்டார். இதனால் மூத்த மாணவிகள் இவருக்கு தண்டனை கொடுத்தனர். அதாவது 48 மாணவிகளும் இவரை அடித்தனர் என்று கூறினார். வகுப்பு தோழிகளால்  புறக்கணிக்கப்பட்ட ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த பரிதாபத்தையும் சோகத்தையும்  ஏற்படுத்தியுள்ளது.

 

Categories

Tech |