நடிகர் ரஜினிக்கு வரிச்சலுகை அளித்த வருமானவரித்துறை விஜய்யை மட்டும் குறி வைப்பது ஏன் என்று திமுக எம்பி தயாநிதிமாறன் மக்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று நடைபெற்ற மக்களவை கூட்டத்தில் திமுக MP தயாநிதி மாறன் பேசியதாவது, நடிகர் ரஜினிகாந்துக்கு ஒரு கோடி ரூபாய் வரையில் வரிச்சலுகை மத்திய அரசு அளித்திருப்பது அற்புதமான ஒன்று. நீங்கள் பட்ஜெட்டில் அளித்த சலுகை நிறைவேற்றியுள்ளார்கள்.
ஆனால் அதே தமிழகத்தில் தான் நடிகர் விஜய் போன்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. நெய்வேலியில் நடந்த படப்பிடிப்பில் இருந்து அவரை அழைத்து வந்திருக்கிறீர்கள் இது என்ன நியாயம் என்று அவர் கேள்வி எழுப்பினார்.