Categories
உலக செய்திகள்

மாதம் ரூ. 75 ஆயிரம் சம்பாதிக்கும் ஒரு வயது குழந்தை… எப்படி தெரியுமா..? வெளியான ஆச்சரிய தகவல்..!!

அமெரிக்காவில் ஒரு வயதே ஆன ப்ரிக்ஸ் என்ற குழந்தை மாதம் சுமார் 75 ஆயிரம் சம்பாதிப்பதாக ஆச்சரிய தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் ப்ரிக்ஸ் (ஒரு வயது) என்ற குழந்தையுடைய தாய் இன்ஸ்டா பக்கத்தில் தான் மேற்கொள்ளும் பயண புகைப்படங்களை பகிர்ந்து வந்துள்ளார். அதேசமயம் அவர் பயணம் செய்யும் இடங்கள் குறித்து விவரித்து ஒரு புத்தகமும் எழுதி வந்துள்ளார். இந்த நிலையில் அவர் கர்ப்பமானதால் பயணமும் தடைபட்டது. இதனால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எந்த விதமான போஸ்டும் பகிர முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து குழந்தை பிறந்த பிறகு அவர் என்ன செய்யலாம் என்ற குழப்பத்திலேயே இருந்து வந்துள்ளார். அதன் பிறகு இன்ஸ்டாகிராமில் குழந்தை பெயரில் புதிய கணக்கினைத் தொடங்கி குழந்தையுடன் அமெரிக்க நகரங்களில் செய்யும் பயணத்தை பதிவிட்டு வந்துள்ளார்.

https://www.instagram.com/reel/CU47qmhlzzq/?utm_medium=share_sheet

இவ்வாறு இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கிய சில நாட்களிலேயே அந்த கணக்கினை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பின்பற்ற ஆரம்பித்துள்ளனர். அதேசமயம் அக்டோபர் மாதம் 14-ஆம் தேதி கடந்த 2020-ஆம் ஆண்டு குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் அவர் 16 அமெரிக்க நகரங்களுக்கு பயணம் செய்துள்ளார். இவ்வாறு அவர் ஒரு வயது குழந்தையுடன் சென்று பயணம் செய்து இன்ஸ்டாவில் பதிவிடும் வீடியோவிற்கு மாதம் சுமார் ஆயிரம் அமெரிக்க டாலர்கள் அதாவது 75 ஆயிரம் ரூபாய் இந்திய மதிப்பில் ஊதியமாக கிடைக்கிறது.

Categories

Tech |