நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகேயுள்ள வழுவூர் திருநாள்கொண்டச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி.. இவருக்கு சிவரஞ்சனி (25) என்ற மகள் உள்ளார்.. இவர் அரியலூரிலுள்ள தனியார் காலேஜ் ஒன்றில் எம்.பி.ஏ. படித்து வந்தார்.
இருவரும் தீவிரமாக காதலித்து வந்ததால் திருமணம்செய்து வைக்க இரு குடும்பத்தினரும் முடிவு செய்திருந்தனர். இந்த சூழலில் தான் சிவரஞ்சனியின் சகோதரி அண்மையில் ஒருவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டு யாருக்கும் தெரியாமல் வீட்டைவிட்டு சென்றுவிட்டதாகக் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக சிவரஞ்சனியை திருமணம் செய்துகொள்வதற்கு நெடுமாறனின் குடும்பத்தினர் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
வீட்டில் தான் எதிர்ப்பு என்றால் நெடுமாறனும் சிவரஞ்சனியைப் புறக்கணித்துள்ளார். சம்பவ தினத்தன்று (ஜூன் 11ஆம் தேதி) சிவரஞ்சனி நெடுமாறனிடம் பேசுவதற்கு முயற்சி செய்துள்ளார்.. ஆனால், நெடுமாறன் பேச முடியாது என்று மறுப்பு தெரிவித்ததால், மிகுந்த மனவேதனையடைந்த சிவரஞ்சனி தன்னுடைய உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார்.
இதனைப் பார்த்த பக்கத்து வீட்டில் இருந்த நெடுமாறன் வேகமாக ஓடிவந்து, சிவரஞ்சனியை காப்பாற்ற முயற்சித்தார்.. இருப்பினும் பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனே படுகாயமடைந்த சிவரஞ்சனியை நெடுமாறனும், அவரது உறவினர்களும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அதனைத்தொடர்ந்து நிலைமை மிகவும் மோசமானதால் மேல்சிகிச்சைக்காக கும்பகோணம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.. இந்தநிலையில், அங்கு சிகிச்சைப் பலனின்றி சிவரஞ்சனி கடந்த ஜூன் 17ஆம் தேதி பரிதாபமாக இறந்தார்.. இதையடுத்து, தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப்பதிவு செய்து பெரம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையின் முடிவில், தற்கொலைக்கு தூண்டியது நெடுமாறன் என்பதை உறுதி செய்த போலீசார் நெடுமாறனை நேற்று முன்தினம் கைதுசெய்து சிறையிலடைத்தனர்.