காதலனைத் தேடி மெக்சிகோ சென்ற அமெரிக்க பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டு சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அழகிய இளம்பெண்ணான 23 வயதுடைய லிஸ் பெத் புளோரஸ் (Lizbeth Flores) என்பவர் ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி தனது காதலனைப் பார்ப்பதற்காக மெக்சிகோவுக்கு சென்றார்.. அன்று மாலை நேரமே வீடு திரும்பிவிடுவதாக சொல்லி விட்டு சென்ற மகள் 10 ஆம் தேதி ஆகியும் வீட்டுக்கு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த லிஸ்பெத் இன் தாய் மரியா ரூபியோ(María Rubio) போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்துள்ளார்.
இந்நிலையில் ஆகஸ்ட் 11ஆம் தேதி, லிஸ்பெத் மெக்சிகோவில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். கொலை செய்யப்படுவதற்கு முன் லிஸ்பெத் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது..
லிஸ்பெத் இன் பற்கள் அனைத்தும் பிடுங்கப்பட்டதுடன், அவரின் தலைமுடி தோலுடன் கொடூரமாக உரிக்கப்பட்டு, பயங்கரமான நிலையில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அந்த பெண் தனது காதலரை சந்தித்தாரா?, அவரை இப்படி கொடூரமாக கொலை செய்தது யார்? என்பது குறித்த எந்த தகவல்களும் இதுவரை கிடைக்கவில்லை.. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை..
இதனிடையே மெக்சிகோவில் இருக்கும் தனது மகளின் உடலை அமெரிக்கா கொண்டு வரும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார் அந்த பெண்ணின் தாய்.