பேமானித்தனம் பண்ணி முதல்வர் , பிரதமர் ஆகிவிட்டார்கள் என்று நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நடிகர் மண்சசூரலிகான் கடுமையாக வசைபாடியுள்ளார்
தமிழகத்தில் தண்ணீர் உட்பட பல பிரச்சனைகள் இன்று விவாதிக்க கூடிய விஷயமாக இருக்கின்றது. அணுக்கழிவு கிடங்கு அமைப்பு விவகாரம் , ஹைட்ரோ கார்பன் , மீத்தேன் வாயு போன்ற இயற்க்கை வளங்கள் பாதிக்கக்கூடிய பல்வேறு திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த ஆளும் அதிமுக அரசும் , மத்திய பாஜக அரசும் முனைப்பு காட்டி வருகின்றது. தமிகத்திற்கு எதிரான திட்டங்கள் என்று அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி எதிர்ப்புகளை தெரிவித்து வரும் நிலையில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவரும் , நடிகருமான மன்சூரலிகான் மத்திய மாநில அரசுக்களை கடுமையாக விமர்சித்துள்ளார்.
பேமானி தனம் பண்ணிக்கிட்டு உட்காந்துகிட்டு முதலமைச்சர் என்று சொல்றாங்க , பிரதமர் என்று சொல்றாங்க எப்படி விவசாயத்தை பாதுகாப்போனு சொல்றாங்க. போராடித்தான் சாகவேண்டும் என்று இருக்கிறது. இங்க ஒரு வேளையும் தண்ணீர் கிடைக்காது. நகரத்தில் தண்ணி இல்ல. ஜெயிலில் எல்லாம் கிடைக்கும். நாங்க போராட்டம் பண்ணி விட்டு ஜெயிலுக்கு போய் நல்லா சாப்பிடுகிறோம். அரசே மீத்தேன் ஹைட்ரோ கார்பன் எல்லாத்தையும் தூக்கிட்டு ஓடணும் , தண்ணீர் பாயனும் , தடுப்பணைகள் கட்டணும் இதுதான் நாம் தமிழர் கட்சியின் பிரதான நோக்கம் என்று தெரிவித்தார்.