தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர் ஆர்.கே செல்வமணி. இவர் புலன் விசாரணை மற்றும் கேப்டன் பிரபாகரன் போன்ற பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். இவர் நடிகையும், ஆந்திர மாநிலத்தின் அமைச்சராக இருக்கும் ரோஜாவின் கணவரும் கூட. சென்னையில் உள்ள சாலிகிராமத்தில் ஆர்.கே. செல்வமணி வசித்து வருகிறார். இவர் தன்னுடைய காரை வீட்டில் விட்டுவிட்டு வேலை காரணமாக வெளியே சென்றுள்ளார். அப்போது ஆட்டோவில் வந்த சில மர்ம நபர்கள் கல்லை எடுத்து காரின் கண்ணாடியை உடைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
இது தொடர்பான காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து ஆர்கே செல்வமணி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இயக்குனர் ஒருவரின் வீட்டில் நின்று கொண்டிருந்த காரின் கண்ணாடியை மர்ம நபர்கள் சிலர் உடைத்த சம்பவம் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.