Categories
தேசிய செய்திகள்

தவிக்கும் வாயில்லா ஜீவன்… தண்ணீர் கொடுத்து தாகம் தணிக்கும் முதியவர்… வைரல் வீடியோ!

வயதான முதியவர் ஒருவர் நாய் ஒன்றுக்கு தனது உள்ளங்கையில் தண்ணீர் பிடித்துவந்து கொடுத்து தாகம் தணிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய வன அதிகாரி சுசாந்தா நந்தா (Susanta Nanda IFS) தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், வயதான முதியவர் ஒருவர் நீல நிற தொப்பி அணிந்து கொண்டு தெருநாய் ஒன்றுக்கு, அருகில் உயரமாக அமைக்கப்பட்டுள்ள குழாயில் இருந்து உள்ளங்கையில் தண்ணீரை பிடித்து வந்து கொடுக்கிறார்.

பாவம் நாய் தாகத்தில் இருந்ததால் நொடியில் வேகமாக குடித்து முடித்துவிட, மீண்டும்  சிறிது தூரம் நடந்து சென்று குழாயில் இருந்து தண்ணீரை பிடித்து கொண்டு வந்து கொடுக்கிறார் முதியவர். மிகவும் அன்புடன் கனிவோடு அந்த வாயில்லா ஜீவனிடம் முதியவர் இரக்கத்துடன் தாகம் தணித்துள்ளார். முதியவர் பாசம் காட்டும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வயதான காலத்தில் தன்னால் முடியாத நிலையிலும் வாயில்லா ஜீவனுக்கு தண்ணீர் கொடுத்து தாகம் தணித்த இந்த முதிவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.

Categories

Tech |