மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை முதியவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கொட்டாய் பகுதியில் கால்நடைகளை மேய்க்கும் தொழிலாளியான மனோகரன் என்ற முதியவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட 29 வயது இளம்பெண்ணும் வசித்து வருகிறார். இந்நிலையில் முதியவர் இளம் பெண்ணை ஏமாற்றி அங்கு உள்ள ஒரு வனப்பகுதிக்குள் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இது குறித்து அந்த பெண் தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த தந்தை பாலக்கோடு காவல் நிலையத்தில் முதியவர் மீது புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை முதியவர் பாலியல் பலாத்காரம் செய்தது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் அந்த முதியவரை கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர்.