அதன்படி சில கார் டிரைவர்கள் என்ன செய்வார்கள் என்றால் காரில் தங்களுடன் ஆட்கள் இருப்பதுபோல் எதையாவது வைத்து காட்டி விதிகளை மீறி தனி வழித்தடத்தில் பயணிப்பார்கள். அதேசமயம் அவர்களை போக்குவரத்து போலீசார் மடக்கி பிடித்து அபராதமும் விதிப்பார்கள். இது அமெரிக்காவில் அடிக்கடி நடைபெற்று வரும் சம்பவம் தான்.
இந்தநிலையில் இதேபோன்று ஒரு சம்பவம் நடந்துள்ளது. அந்த சம்பவம் அரிசோனா மாகாணத்தை சேர்ந்த ஒருவரால் நிகழ்ந்துள்ளது. 62 வயதுள்ள முதியவரான இவர் தனி வழித்தடத்தில் பயணிக்க வேண்டும் என்ற ஆசையில் மனித எலும்புக்கூடுக்கு ஒரு தொப்பியை போட்டு விட்டு காரின் முன்இருக்கையில் அமர வைத்து ஜாலியாக காரை ஓட்டி சென்றுள்ளார்.
அவர் நினைத்தது போலவே காரை தனி வழித்தடத்தில் ஓட்டி சென்றுள்ளார். ஆனால் காருக்குள் இருப்பது மனிதன் இல்லை அது ஒரு எலும்புக்கூடு என்பதை போக்குவரத்து போலீசார் துல்லியமாக கண்டுபிடித்துவிட்டனர். பின்னர் உடனே விரட்டி சென்று அந்த காரை தடுத்து நிறுத்தி போலீசார் முதியவரை மடக்கி பிடித்தனர். அதைத்தொடர்ந்து அவருக்கு போலீசார் அபராதம் விதித்தனர். மேலும் இதுபோன்று செயல்களில் இனி ஈடுபடக்கூடாது என்று எச்சரித்துவிட்டு அவரை அனுப்பி வைத்தனர். எலும்பு கூடுடன் பயணம் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.