தென்காசி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வீசிய பலத்த காற்றால் விழுந்த மின்கம்பத்தை சீர் செய்யும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள சுரண்டை நகரத்திற்கு உட்பட்ட ஆலம்பட்டி பகுதியிலிருந்து ஆனைகுளம் விலக்கு செல்லும் வழியில் மின்கம்பம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் அப்பகுதியில் வீசிய பலத்த காற்றினால் மின் கம்பம் சரிந்து விழுந்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் மின் இணைப்பு உடனடியாக துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் மின் இணைப்பை சீர் செய்ய வேண்டும் என நேற்று காலை சுரண்டை நகரத்திற்கு உட்பட்ட மின்வாரிய அலுவலக மின் பொறியாளரிடம் புகார் அளித்துள்ளனர். மேலும் சுரண்டை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வனஜாவின் உத்தரவின்படி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பழைய மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின் கம்பத்தை அமைத்துள்ளனர்.