Categories
தேசிய செய்திகள்

காவலில் எடுக்கப்பட்ட விதி மீறிய யானை!

 மத்தியப் பிரதேசத்தில் சாலை விதிகளை மீறியதாகக் கூறி யானை ஒன்றினை போக்குவரத்து காவல் துறையினர் காவலில் எடுத்துள்ளனர்.

சாலை விதிகள் மீறுவோர் மீது வழக்குப் பதிவு செய்வது வழக்கமான ஒன்று. மத்தியப் பிரதேச மாநிலம் நரசிங்கபூரில் சாலை விதிகளை மீறிய யானையை போக்குவரத்து காவல் துறையினர் காவலில் எடுத்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கட்டளைக்கு அடிபணியாததாலும் உரிமம் இல்லாத காரணத்தாலும் யானை காவலில் எடுக்கப்பட்டதாக போக்குவரத்து காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

யானை ஆரோக்கியமாக உள்ளதா என்பதை அறிந்துகொள்ள மருத்துவர்கள் பரிசோதனை நடத்தினர். காவலில் உள்ள யானைக்கு உணவு வழங்கப்பட்டது. சாலையில் பயணம் செய்வோரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு யானை காவலில் எடுக்கப்பட்டதாகப் போக்குவரத்து காவல்துறை தகவல் வெளியிட்டது. பின்னர், வனத்துறை சார்பில் நடத்தப்பட்ட சோதனையில் யானை ஆரோக்கியமாக உள்ளது என்பது தெரியவந்ததைத் தொடர்ந்து, அது விடுவிக்கப்பட்டது.

Categories

Tech |