பீகாரில் ராக்கி கயிறு கட்ட முயன்ற போது பாம்பு கடித்ததால் சுற்றுச்சூழல் ஆர்வலர் பரிதாபமாக உயிரிழந்தார்..
ரக்ஷா பந்தன் என்பது சகோதரிகள் தங்களது சகோதரர்கள் சந்தோசமாக நீண்ட ஆயுளுடன் வாழ்க்கை வாழ்வதற்கு ஒரு பாதுகாப்பான கயிற்றை அதாவது நூலை கட்டுவார்கள்.. இது ‘ராக்கி’ என்று அழைக்கப்படுகிறது. இந்த பண்டிகை கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி இந்தியா முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த நிலையில் பீகாரில் ரக்ஷா பந்தன் கொண்டாடும் விதமாக சுற்றுச்சூழல் ஆர்வலர் இரண்டு பாம்புகளை கைகளில் பிடித்து கொண்டு சகோதரர்களாக கருதி ராக்கி கயிறு கட்ட முயன்றார்.. அப்போது ஒரு பாம்பு 25 வயதான சுற்றுச்சூழல் ஆர்வலரின் காலை கடித்தது.. சுற்றி மக்கள் நின்று கொண்டு வேடிக்கை பார்த்தனர்.. அதன் பின் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.. பாம்பு கடிக்கும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது..
बिहार के सारण में बहन से साप को राखी बंधवाना महंगा पड़ गया साप के डसने से भाई की चली गई जान pic.twitter.com/675xsgnZ6N
— Tushar Srivastava (@TusharSrilive) August 23, 2021