பெண் ஒருவர் தன்னையும் தனது மகளையும் கருணைக்கொலை செய்ய மனு கொடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையை சேர்ந்த மாரீஸ்வரி என்ற பெண் தன்னையும், தனது மன வளர்ச்சி குன்றிய 14 வயது மகளையும் கருணை கொலை செய்ய வேண்டும் என்று ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தனது பெண்ணை மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் சேர்க்க அனுமதி மறுப்பதாகவும், வறுமையில் வாடும் நீங்கள் தான் குழந்தையை வளர்க்க வேண்டும் என்று அதிகாரிகள் பேசுவதாகவும் ஆதங்கத்துடன் கூறியுள்ளார். இந்த சம்பவம் காண்போரை கண்கலங்க செய்துள்ளது.