ராஜாஸ்தான் மாநிலம் பரத்பூரில் உள்ள அக்ரபாரா கிராமத்தை சேர்ந்த தம்பதியர் கும்பர் மற்றும் சர்பேஷ் சிங்.. இதில், கும்பருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த சுரேஷ் குஷ்பாஹா என்பவருக்கும் பணம் விஷயத்தில் சண்டை ஏற்பட்டுள்ளது.
இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுக்க குஷ்பாஹா தன்னுடைய நண்பர்கள் 3 பேருடன் இணைந்து கும்பர் மற்றும் சர்பேஷ் சிங் ஆகிய இருவரையும் பலமாக தாக்கியுள்ளனர். அதுமட்டுமின்றி இருவர் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம், பக்கத்தினர் இருவரையும் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சர்பேஷ் சிங்குக்கு பலத்த தீ காயம் ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக வேறொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். கும்பர் பலத்த தீ காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.