Categories
தேசிய செய்திகள்

என்ன ஒரு பாசம்… நியூசிலாந்தில் இறந்த நாய்… இந்தியாவுக்கு வந்த அஸ்தி… கங்கையில் கரைத்த நெகிழ்ச்சி சம்பவம்..!

நியூசிலாந்தில் வாழும் இந்தியர் ஒருவர் தனது வளர்ப்பு நாய் இறந்ததை அடுத்து அஸ்தியை எடுத்து வந்து கங்கை நதியில் கரைத்தது மிகவும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நியூசிலாந்து நாட்டை சேர்ந்தவர் பிரமோத் குமார். இவரது பூர்வீகம் பீகார் மாநிலம் புர்னியா (Purnia) மாவட்டமாகும். அந்நாட்டின் ஆக்லாந்தில் 40 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் இவர், 10 ஆண்டுகளாக லைகான் எனும் நாயை அன்புடன் பாசத்தோடு வளர்த்து வந்துள்ளார்.

Image result for Kumar immersed Lykan ashes in Ganga and performed his last rites as per Hindu tradition. ... all the way to India to immerse his dog's ashes in the river Ganga

இந்த நிலையில் அந்த நாய் சமீபத்தில் இறந்து போனது. இதையடுத்து இந்து மதத்தின் சம்பிரதாயப்படி நாய்க்கு இறுதிசடங்கு செய்தார். பின்னர் நாயின் அஸ்தியை நியூசிலாந்தில் இருந்து பீகார் எடுத்துகொண்டு  வந்து கங்கை நதியில் கரைத்தார்.

Image result for This has been rightly proved by Pramod Kumar who came all the way to India to immerse his dog's ashes in the river Ganga.

இதேபோல் கயாவிலும் அவர் பிண்ட தானம் (pind daan) செய்தார். தனது நாயின் அஸ்தியை நியூசிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வந்து கங்கையில் கரைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |