Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி செய்யணும்… மாட்டி கொண்ட டிரைவர் … வனத்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

மான் கொம்புகள் திருடிய டிரைவரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் பகுதியில் வென்னி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு டிரைவரான அர்ஜுன் என்ற மகன் இருக்கின்றார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அர்ஜுன் சிவகிரி பகுதியில் அமைந்துள்ள கண்மாய்க்கு வேலைக்காக சென்ற போது அப்பகுதியில் மான் கொம்புகள் இருப்பதை பார்த்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்காமல் அதை தனது வீட்டிற்கு எடுத்து சென்று விட்டார். இந்நிலையில் வனத்துறையினருக்கு அர்ஜுன் வீட்டில் மான்கொம்புகள் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அந்த தகவலின் படி வனசரகர் சுரேஷ் தலைமையில், இமானுவேல், ஆனந்தன், பாரதிகண்ணன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் வீரசேகரன் ஆகியோர் இணைந்து அர்ஜுனனின் வீட்டில் திடீரென சோதனை செய்துள்ளனர். அப்போது அங்கு மான்கொம்பு இருந்ததை கண்டுபிடித்து அதை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் மாவட்ட வன அலுவலர் கவுதம் என்பவரின் உத்தரவின்படி வனத்துறையினர் அர்ஜூனின் மீது வழக்குப் பதிவு செய்து மான் கொம்புகளை திருடிய குற்றத்திற்காக அவரை கைது செய்ததோடு 25,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

Categories

Tech |