ஆஸ்திரியாவில் கழிவறைக்கு சென்ற முதியவருக்கு அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
ஆஸ்திரியாவை சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர் தனது வீட்டில் விஷமில்லாத 11 பாம்புகளை வளர்த்து வருகிறார். அவற்றில் 1.6- மீட்டர் நீளமுடைய பாம்பு ஒன்று அந்த இளைஞருடைய வீட்டிலிருந்து பக்கத்து வீட்டின் கழிவறைக்குள் வடிகால் வழியாக நுழைந்துள்ளது. இந்நிலையில் 60 வயது முதியவர் ஒருவர் அந்த கழிவறைக்குள் சென்றுள்ளார். மேலும் அந்த கழிப்பறையில் அமர்ந்திருந்த அந்த முதியவருக்கு ஏதோ ஒன்று அவருடைய மர்ம உறுப்பில் கடிப்பது போன்ற உணர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த கழிப்பறை கிண்ணத்தை உற்று நோக்கி பார்த்துள்ளார்.
அப்போது அதில் கிடந்த மலை பாம்பை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து பாம்பு பிடிப்பதில் வல்லவரான வெர்னர் சம்பவ இடத்திற்கு வந்து அந்த பாம்பை பிடித்ததோடு பாம்பின் உரிமையாளரான அந்த இளைஞரிடம் பாம்பை ஒப்படைத்துள்ளார். மேலும் பாம்பு கடித்ததில் அந்த முதியவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே காவல்துறையினர் பாம்பின் உரிமையாளரான அந்த இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.